TPM Tamil Song No 12: தேவாதி தேவனின் தானங்கட்காக
தேவாதி தேவனின் தானங்கட்காக
ஆவலுடன் அடியாருமுன்பாக
பூவினிற் புவி நேசர் முன்பாக
ஆவியிலும் அதிவணக்கமாக
போற்றுவோம் போற்றுவோம்
போற்றிடுவோம் பொற்பரனை
அற்புதம் அற்புதம் அரூபியான
நற்பரன் சொற்படி சொரூபியானார்
பற்பல பாதகர் பரனை நாடி
நித்தியமாக நிர்மலனை சேர
இம்மானுவானவர் அம்பரமேக
இம்மானுவேலனும் மனுவாகி
தம்மை வெறுத்து தரை மட்டும் தாழ்ந்து
நம்மை யனைத்திட தம்முயிர் விட்டனர்
காசினியெங்கும் காணக்கிடைக்காத
வாசஸ்தலமென்று எங்களுக்காக
ராஜனுடன் நாமிருப்பதற்காக
ஆயத்தமாக்கி அழைப்பேனென்றோ
துன்பங்கள் சூழினும் இன்பமதாக்கி
அன்புடன் ஐயன் அடியாரை காத்து
இன்றுவரை இறையின் பாதம் நாட
ஈந்த கிருபை நினைந்து நட்போடு
பாத்திரமற்ற இப்பாவிகளிவ் வித
காத்திராத கன தானங்களை பெற
உத்தம மார்கமதான என் இயேசுவின்
சுத்தமுகம் கண்டு என்று களிக்கலாம்
No comments:
Post a Comment