என் ஆத்துமாவே என் முழு உள்ளமே
உன்னதன் உத்தம நாமத்தை ஸ்தோத்தரி
வையககத்தில் உனக்கு மெய்யன் மனதிற்ங்கி
செய்த உபகாரம் மறவாமல்
பாவத்திலமிழ்ந்தி பிணியினால் வருந்தி
சாப குழியில் வீழ்ந்து ஆபத்தில் நிற்கையில்
மீட்டுனகிறக்கம் கிருபை என்னும் முடியை
சூடிய கரத்தனை நித்தம் நினைத்து
பெற்ற பிதாபோல் பரிதபித்தனைப்பார்
பற்றிடும் அடியார் முற்றும் பயபடில்
அக்கிரம மெல்லாம் கார்தான் கருணையால்
ஆக்கினையின்றி அகற்றிடுவார்
மாமிசமெல்லாம் வாடும் புல் தானே
பூவில் வளர்ந்தடில் வயலின் பூவாமே
கர்த்தன் கருணைக்கு கரையென்பதில்லையே
நித்தியமாக நிலைத்திடுமே
தித்திடுவீரே தூத கணங்களே
ஜோதியுள்ளவர் கோடி சேனைகளே
ராஜ்ஜியங்களிலவர் காட்டிய கிரியைக்காய்
சாட்சிகள் நாம் துதி சாற்றிடுவோம்
No comments:
Post a Comment