TPM Tamil Song No 34: காணாமற் போன என்னை
காணாமற் போன என்னை
நல் மேய்ப்பர் தேடினார்
தன் தோலின் மேலில் போட்டு
கொண்டன்பாய் இரட்சித்தார்
மேலோக தூதர் கூடினார்
ஆனந்தம் பொங்கி பாடினார்
நேசர் தேடி வந்தார்
இரத்தம் சிந்தி மீட்டார்
என்னை சொந்தமாக கொண்டனர்
பேரன்போடு சேர்த்து கொண்டனர்
என் பாவ காயங் கட்டி
வீண் பயம் நீக்கினார்
என் சொந்தமாக உன்னை
கொண்டேனே பார் என்றார்
அவ்வின்ப சத்தங் கேட்கவே
என் உள்ளம் பூரிப்பாயிற்றே
பேரன்பராக தோன்றி
ஐங்காயம் காட்டினார்
முட்க்ரீடம் சூடினோராய்
என்னோடு பேசினார்
இப்பாவியின் நிமித்தமே
படாத பாடு பட்டாரே
இப்போது இன்பமாக
என் மீட்பர் பாதத்தில்
ஒப்பற்ற திவ்ய அன்பை
தியானம் செய்கையில்
ஆனந்தம் பொங்கி பூரிப்பேன்
மென் மேலும் பாடி போற்றுவேன்
ஆட்கொண்ட நாதர் பின்பு
பிரசன்னமாகுவார்
தம் ஞான மணவாட்டி
சேர்த்தென்றும் வாழ்விப்பார்
எம் மாசும் தீங்கும் நீங்கிப்போம்
பேரின்பம் பெற்று வாழுவோம்
No comments:
Post a Comment