Wednesday, July 29, 2020

TPM Tamil Song No 35: ஆணி முத்தை கண்டேன் நான்


TPM Tamil Song No 35: ஆணி முத்தை கண்டேன் நான் 

ஆணி முத்தை கண்டேன் நான் 
மகிழ் கொள் உள்ளமே 
இரட்சகா உம்மை நம்புவேன் 
இரட்சண்ய மூர்த்தியே 

சர்வ சக்ராதிபதியே 
இராஜாதி இராஜாவே 
நேர்பாதை காட்டும் தீபமே 
நீதியின் ஜோதியே 

தேவ சிங்கார வனத்தின்
ஜீவ விருட்சமே 
பாவத்தை நீக்கும் இரட்சகன் 
சாரோன் ரோஜாப்பூவே 

பூலோக தாகந்தீர்த்திடும் 
மேலோக நதியே 
காலாகாலம் மறைந்திருந்த 
ஞானமும் நீரே 

சுவர்க்கத்தின் ஜோதி நாயகா 
என் திவ்யமிர்தமே 
என் ஆதியே என் அந்தமே 
என் ஜீவனும் நீரே 

TPM Tamil Song No 34: காணாமற் போன என்னை


TPM Tamil Song No 34: காணாமற் போன என்னை

காணாமற் போன என்னை 
நல் மேய்ப்பர் தேடினார் 
தன் தோலின் மேலில் போட்டு 
கொண்டன்பாய் இரட்சித்தார் 
மேலோக தூதர் கூடினார் 
ஆனந்தம் பொங்கி பாடினார் 

நேசர் தேடி வந்தார் 
இரத்தம் சிந்தி மீட்டார் 
என்னை சொந்தமாக கொண்டனர் 
பேரன்போடு சேர்த்து கொண்டனர் 

என் பாவ காயங் கட்டி
வீண் பயம் நீக்கினார் 
என் சொந்தமாக உன்னை 
கொண்டேனே பார் என்றார் 
அவ்வின்ப சத்தங் கேட்கவே 
என் உள்ளம் பூரிப்பாயிற்றே 

பேரன்பராக தோன்றி
ஐங்காயம் காட்டினார் 
முட்க்ரீடம் சூடினோராய் 
என்னோடு பேசினார் 
இப்பாவியின் நிமித்தமே 
படாத பாடு பட்டாரே 

இப்போது இன்பமாக 
என் மீட்பர் பாதத்தில் 
ஒப்பற்ற திவ்ய அன்பை 
தியானம் செய்கையில் 
ஆனந்தம் பொங்கி பூரிப்பேன் 
மென் மேலும் பாடி போற்றுவேன் 

ஆட்கொண்ட நாதர் பின்பு 
பிரசன்னமாகுவார் 
தம் ஞான மணவாட்டி 
சேர்த்தென்றும் வாழ்விப்பார் 
எம் மாசும் தீங்கும் நீங்கிப்போம் 
பேரின்பம் பெற்று வாழுவோம் 

TPM Tamil Song No 33: பரனே கருணாக்கடலே


TPM Tamil Song No 33: பரனே கருணாக்கடலே 

பரனே கருணாக்கடலே - நம தாழ்ந்த சமுத்திரமே
ஜெயம் ஜெயம் அதிசயம் ஜெயம் - மன 
பயமகன்று நாம் பாடுவோம் 
ஆதி - ஜோதி - நீதியே 

ஆதியா தாம் மாது ஏவை 
செய்த தீதுகலகுதியகற்ற 
நீதி வேத மோதி ஜீவனூதி ஆதரித்தீந்தாயே 

பாவம் கோபம் சாபம் யாவும் 
தேவா ஈவாய் மேவினார் 
எவனோ நம்பினவனே ஜீவ னடைவா னெனெவே கூவினார் 
ஜீவ தேவ தேவனே 

பாவமில்லையென்றால் பொய்யாம் 
பாவ அறிக்கை செய்தால் மெய்யாய்
பாவம் மன்னித்தனியாத்தை நீக்கி துய்யதாகவே 
நீதி மோதி உண்மையாம் 

பாவத்தை மரைப்போன்  வாழ்வடையான் 
பாவத்தை யுரைப்போன் தாழ்வடையான் 
பாவ பாரம் தேவ கோபம் நீக்க மரித்தாரேசு 
தேவ கோப மேற்றவர் 

சுத்த முகத்தை மறைத்த பாவத்தை 
சுத்திகரித்து எரித்த தெய்வத்தின் 
சுத்த புத்திர னேசு கிறிஸ்து சத்துரு பேயை ஜெயித்ததால் 
பாடி பாடி ஏற்றுவோம் 

கனவால் நினைவால் மனதால் பின்னும் 
தினமாய் செய்வினை பாவ மெல்லாம் 
இனிமே லொரு காலம் நினையா தெனவே கதலி லெறிந்தாரே 
ஞான ரான வானவ 

ஓடி நாடி செய்த பாவம் 
கோடி கோடி யானாலும் 
கடலி னடியில் கூட தேடியும் காணக்கூடா தொரு நாளும் 
பாடி பாடி போற்றுவோம் 

Wednesday, July 15, 2020

TPM Tamil Song No 32: இயேசுவை நான் நம்பி ஜீவியம் செய்குவேன்


TPM Tamil Song No 32:  இயேசுவை நான் நம்பி ஜீவியம் செய்குவேன் 

இயேசுவை நான் நம்பி ஜீவியம் செய்குவேன் 
இயேசு தான் என் தஞ்சம் வானிலும் பூவிலும் 

பூமியின் பாரங்கள் யாதொன்றும் எனக்கில்லை 
போக்கிட மாகுவோன்  என் இயேசு தானல்லோ 

இராப்பகல் அன்பர்தம் கண்மணி போல் என்னை 
காப்பதற்காகவே தூங்கிடேன் என்கிறார் 

சாத்தானும் சேனையும் சண்டை செய்திடினும் 
சாவை வென்று உயிர்தோனால் ஜெயக்கொடி நாட்டுவேன் 

பூலோக மாயையில் நான் வீழ்ந்திடாமலே 
மேலோக காட்சி என் கண்களில் வீசுதே 

பாவம் பெருகுதே லோகம் உயருதே 
நீதியின் சூரியன் மங்கி எரியுதே 

ஒவ்வொருவரும் தம் தம் காரியம் நோக்கவே 
இயேசுவின் காரியம் தேடிடார் யாருமே 

மார்க்கம் தப்பி செல்லும் மானிடரை எல்லாம் 
வழிபடுத்துவதில் என் வாணாளை போக்குவே

TPM Tamil Song No 31: இயேசுவின் பின்னாலே


TPM Tamil Song No 31: இயேசுவின் பின்னாலே

இயேசுவின் பின்னாலே மண்ணாசைகளும் 
மாய்த்து நேசமுடன் போவோம் 

ஜோதியுயர் நாதனுடன் 
ஜோதிலோகம் நின்றிடலாம் - போவோம் 

பரலோகம் விட்டு பாவிகள் மீதன்புற்றார் 
நரர் பரம் செல்ல நல்வழி திறந்திட்டார் 
பரா பரன் 

பாவங்களை நீக்கி பரிகரிக்க என்னை 
பாவ கோலமாகி பரனின் சுதன் தன்னை 
மாய்தனரே 

பரிசுத்தராக பாரிலும் ஒன்று கூடி 
பரலோகம் செல்ல பரிசுத்தாவி தந்தார் 
மா அன்புதான் 

பொய்யுலகம் வேண்டாம் இயேசு எனக்கெல்லாம் 
தூய சாலோம் செல்வோம் 
இயேசன் அடி  சென்றால் ஐயமின்றி 

மனம் மாறிடாதோர் மரணமடைவாரே 
தினந்தோறும் தீயிற்றியங்கி அழுவாரே 
திரும்புவீர் 

இருதய சுத்தம் இருந்தடில் நித்தம் 
வரும் நாளில் இயேசு நாம் வானிலொன்று கூடி 
வாழ்ந்திடலாம் 

TPM Tamil Song No 30: ஆவியிற் சந்தோஷங் கொண்டான்


TPM Tamil Song No 30: ஆவியிற் சந்தோஷங் கொண்டான்

 ஆவியிற் சந்தோஷங் கொண்டானதிக்க  இப்போ 
ஆவியை மழை போல் ஊற்ற வேணும் 

தெய்வத்தின் மகிமை இவ்விடத்தினில் இன்று 
பிராகாசிக்கவேணும் வெளிச்சமாக 
பாவத்தினுடைய அந்தகாரங்கள் - எல்லா 
உள்ளங்களில் நின்றும் நீங்கி போகட்டும் 

சொர்க்க சந்தோஷம் கொண்டானதிக்க 
பரலோக சத்தியாலின்று நடத்தவேனும் 
கற்கள் போலுள்ள எல்லா உள்ளங்களையும் 
இன்று மெழுகு போல் உருக்கவேணும் 

ஆத்ம நிலங்களை சரிப்படுத்தி இன்று 
சொர்க்க சீயோனிலே வித்து விதைக்க 
நல்ல நிலத்தின் பலன் போலாகி 
ஆவியின் மழையால் நனைக்க வேண்டும் 

வெளிச்சங்கள் வீசுது அந்தகாரம் மாறுது 
தெய்வத்தின் ஆவி உள்ளில் வரும்பொழுது 
மாய்கையான லோகத்தில் நான் சேர்ந்து நிற்காமல் 
என் இரட்சகனாம் இயேசுவில் நான் நம்பிக்கை வைப்பேன் 

Sunday, June 28, 2020

TPM Tamil Song No 29: இயேசுவை போல ஆகவும்


TPM Tamil Song No 29: இயேசுவை போல ஆகவும்

இயேசுவை போல ஆகவும் இயேசுவின் வார்த்தை கேட்கவும்
இயேசுவை நோக்கும் ஜீவியம் இவைகளை வாஞ்சிக்கிறேன்

ஸ்திரப்படுத்துமென் நாத நிறைவாய் ஆவியை தா தா
கிறிஸ்துவின் மகிமை யதினால் நிறைந்து நான் பிரகாசிக்க

செய்திட்ட தப்பிதங்களும் மற்றும் பல பெலவீனமும்
எல்லாம் நீக்கிடும் நாயகா முற்றும் பூரணமாக்கிடும்

பிரார்த்தனையில் நான் உற்சாகமாய் போராடிட
உந்தன் சகாயம் நல்கிடும் எந்தன் மத்தியஸ்தரே

வாக்குத்தத்தங்கள் யாவையும் நான் சொந்தமாக்கி கொள்ளவே
விசுவாசம் நிறைவாகவும் பிரகாசம் முற்றிலும் தா

உபத்திரவத்தால் பலர் முற்றும் பின்னே போகினும்
வல்லமை தந்தென்னை இயேசுவே வல்ல சாட்சியாகிடும்

வாங்குவதல்ல உத்தமம் தாங்குவதே பரிசுத்தம்
ஞானம் தாரும் இவ்விதம் யானும் சிந்தை செய்திட

கஸ்டமதிலும் பாடவும் நஷ்டமதில் கொண்டாடவும்
சக்தியருளும் நாதனே பக்தியில் பூரணமாக்கிடும் 

TPM Tamil Song No 28: குருசின்மேல் குருசின்மேல்


TPM Tamil Song No 28: குருசின்மேல் குருசின்மேல்

குருசின்மேல் குருசின்மேல்
காண்கின்றதாரிவர்
பிராணநாதன் பிராணநாதன்
என் பேர்க்காய்ச் சாகின்றார்

பாவத்தின் காட்சியை
ஆத்துமாவே பார்த்திடாய்
தேவகுமாரன் மா சாபத்திலாயினார்

இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்

சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்

இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்

TPM Tamil Song No 27: இயேசுவின் நேச முகம்


TPM Tamil Song No 27: இயேசுவின் நேச முகம் 

இயேசுவின் நேச முகம் ஏழை கண்டெப்போ மகிழ்வேன்
மோசமான இவ்வுலகில் ஆசை எனக்கவரே

பார சுமையதினால் பாடு படுவோரை மீட்க
பரலோக இன்பம் விட்டு பாருலகிற் தேடி வந்த

மண்ணில் மனத்துயரில் மாண்டு நான் மயங்குகையில்
கண்ணின் மணிபோல என்னை எண்ணி அணைத்த எந்தன் இயேசு

துன்பம் துயரம் நீக்கி இன்பம் ஏழை எனக்களித்தார்
நண்பர் நற்பாத மென்றும் நாடி என் நாட்கழிப்பேன்

இவ்வண்ணம் இவ்வுலகில் எண்ணிடவோ யாருமில்லை
எண்ணவுமை எப்பொழுதும் ஏழை எனக்கருளும்

என்று மடியார் உம்மை ஏகமாய் சேர்ந்தேற்றிடவே
அன்றன்று யாவருக்கும் அருளுமனுக்கிரகம்

இன்பமும் ஈசன் ஒளி வீசும் பிரகாசமுள்ள
பொன் நகர் ஏகி மன்னன் மார்பில் மகிழ்ந்திடுவேன் 

TPM Tamil Song No 26: எந்தன் பூமானைக்கான


TPM Tamil Song No 26: எந்தன் பூமானைக்கான

எந்தன் பூமானைக்கான சிந்தை பெருகுதையா
என்றைக்கு காண்பேனோ - ஓ ஓ

சுந்தரத்தில் மிகுந்து அந்தரங்கத்திருக்கும் எந்தன் பூமானைக்கான
அழகுடைய அண்ணல் இயேசுவை காண

விண்ணிலிருந்தவர் மண்ணின் மேல் வந்தவர்கன்னிகையிற் பிறந்தவர்
லாசருக்காக கண்ணீரை விட்டழுதவர்

இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ சொன்ன வாக்கை நினைத்து
அடியேன் உன் பாதம் பணிந்து வந்தேன்

பொல்லாதோரை ரட்சிக்க வல்ல பராபரன் என்ன துயரடைந்தார்
அதை நிணடித்தால் சொல்ல முடியுதில்லை

பாதகரின் அடி கன்னத்தில் படும்வேளை என்னை நினைத்தீரே நீர்
அதை நினைத்தால் உம்மை மறப்பேனோ நான் ?

Monday, June 22, 2020

TPM Tamil Song No 25: பாதகனாய் நான் அலைந்தேன்


TPM Tamil Song No 25: பாதகனாய் நான் அலைந்தேன்

பாதகனாய் நான் அலைந்தேன்
பாவி என்று உணராதிருந்தேன்
தத்தளிக்கும் ஏழை வந்தேன்
சத்தியரே யாவும் தந்தேன்

மன்னா உந்தன் விண்ணை விட்டு
மண்ணில் வந்து பாடுபட்டு
மறித்து அடக்கம் பண்ணப்பட்டு
உயிர் தெழுந்தீர் என்னையிட்டு

உந்தன் பாடு கஸ்தி யாலாம்
வந்த தெந்தன் பாக்ய மெல்லாம்
இம்மை செல்வம் அற்ப புல்லாம்
உம்மை பெற வீட்டேனெல்லாம்

சிரசுக்கு முள்ளால் முடி
அரசன் கோல் நாணல் தடி
நீர் குடிக்க கேட்டாலோடி
ஓர் பாதகன் தந்தான் காடி

கெத்செமனே தோட்டத்திலே
கஸ்தி பட்ட என் அண்ணலே
அந்த ஆவி உள்ளத்திலே
வந்தால் வெல்வேன் யுத்தத்திலே 

TPM Tamil Song No 24: இயேசு என் அஸ்திபாரம்


TPM Tamil Song No 24: இயேசு என் அஸ்திபாரம்

இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே 
நேசமுசி பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும் 

என்ன மதுரம் அவர் நன்னய நாமசுவை 
என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே 

பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும் 
அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசிருக்கையில் 

வியாதியால் எந்தன் அது காயம் கெட்டு போயினும் 
மாய தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார் 

லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடுனும் 
சோகம் அடைவேனோ என் ஏகன் எனக்கிருக்க 

என்னென்ன மாய லோக கன்னல் என்மேல் வந்தாலும் 
முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார் 

பாவத்தால் என்னில் வந்த சாப கறைகள் மாற்றி 
சோபித நீதியுடை ஆபரணமாய் ஈவார் 

ஆசை என் மணவாட்டி ஆக்குவேன் உன்னை என்னும் 
நேச உறுதியுரை இயேசு எனக்களித்தார் 

TPM Tamil Song No 23: வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பர்


TPM Tamil Song No 23: வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பர் 

வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பர் 
பாதையும் சத்தியமும் ஜீவன் நீரே 
பேதையாம் ஏழையான் பாதை செல்ல 
நீர் அல்லால் யாரும் இல்லை 

இயேசு நாதா ஏழைக்கு நீர் அல்லாமல் யாருமில்லை 
இயேசு நாதா ஏழைக்கு நீர் அல்லாமல் யாருமில்லை

சாப தீடானதை வைத்த ஆகான் 
கோபத்திற்களாய் எதிர்த்த தாத்தான் 
பாவத்தில் சாகாதுயிர் பிழைக்க 
நீர் அல்லாமல் யாரும் இல்லை - இயேசு 

சத்ய விசுவாசத்தை காத்திடவே 
நித்தம் நின் கீர்த்தியை பாடிடவே 
சத்துரு சேனையில் வெற்றி தர 
நீர் அல்லாமல் யாரும் இல்லை - இயேசு 

ஒரே பிதாவை அறிந்திடவே 
பரிசுத்தாவியை பெற்றிடவே 
வேறேது போக்கும் வழியுமில்லை 
நீர் அல்லாமல் யாரும் இல்லை - இயேசு 

சாத்தான் தலையை சிதைப்பதற்கும் 
அவனை வெற்றி சிறப்பதற்கும் 
சமாதான தேவன் கிருபை செய்ய 
நீர் அல்லாமல் யாரும் இல்லை - இயேசு 

தேவன் மகத்துவத்தில் மேல் வரவே 
ஜீவா கிரீடத்தை தான் தரவே 
அப்போதும் நாங்கள் பாடிடுவோமே 
நீர் அல்லாமல் யாருமில்லை - இயேசு