எப்போதும் நாதனை ஸ்தோத்திhp - நாள்
தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து
அனுபல்லவி
தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி - எப்போ
சரணங்கள்
1. இப்பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினை
ஏதுக்கென் றுள்ளத்திலெண்ணிக்கையாய் நினை
அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை - எப்போ
2. சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவே
சாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவே
மண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே - எப்போ
3. கிறிஸ்தேசு நாயகன் கிருபை உன் பு+ரணம்
கெம்பீரமாக நீ சொல் நாமோச்சாரணம்
பாpச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற்காரணம் - எப்போ
4. வீட்டிலும், காட்டிலும், வெளியிலும், வழியிலும்,
பாட்டிலும், படிப்பிலும், தேட்டிலும், செழிப்பிலும்,
நாட்டிலும், நகாpலும், ஞான முயற்சியிலும் - எப்போ
5. தம்பூர், கின்னரங்கள், ஜாலா;, வீணை, மிரு
தங்கம், தப்லாவுடன் சங்கீத நாதமாய்
அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி - எப்போ
6. துன்பங்கள் சூழினும் துக்கத்திலாழினும்
இன்பமறிந்திலேன் என்றே நீ தாழினும்
கண்பஞ்சடையச் சாவுக்கென்றே நீ வீழினும் - எப்போ
No comments:
Post a Comment