என் ஜீவனுள்ள நாளெல்லாம் சோதோத்தரிப்பேன்
1. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் - (ஸ்தோத்தரிப்பேன் )
2. பாவக் கறை நீங்க என்னை முற்றிலுமாக - உம்
சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்ததினாலே - (ஸ்தோத்தரிப்பேன் )
3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான்
- (ஸ்தோத்தரிப்பேன் )
4. ஆகாயத்து பட்சிகளை போஷிக்கும் தேவன்
தினமும் என்னை போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான்
- (ஸ்தோத்தரிப்பேன் )
5. நாளை தினம் ஊண் உடைக்காய் என் சிந்தைகளை
கவலையற்ற தாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் - (ஸ்தோத்தரிப்பேன் )
6. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனை - அதி
சீக்கிரமாய் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் - (ஸ்தோத்தரிப்பேன் )
No comments:
Post a Comment