Tuesday, May 26, 2020

TPM Tamil Song No 16: மகிமையுள்ள மா இயேசு


TPM Tamil Song No 16: மகிமையுள்ள மா இயேசு 

மகிமையுள்ள மா இயேசு ராஜன் வான தூதர் சேனைகளோடு
சீக்கிரம் வாறார் ஆனந்தமாமே

பூமியும்மதிசயக்க வானோர்கள் ஆர்ப்பரிக்க
தூதர் ஒலியுடன் மேகமதில் வாறார்
ஏழைகள் நாங்கள் இயேசுவை சந்திக்க
ஆ ஆ ஆ ஆ ஆனந்தமாமே

எக்காளம் தான் தொனிக்க வாஞ்சைகள் யாவும் தீர
நண்பரின் பக்கத்தில் யாவரும் கூடியே
ஆனந்தம் பாடி நாம் இயேசுவை  போற்றிட
ஆ ஆ ஆ ஆ ஆனந்தமாமே

பூமியின் ஜாதிகளும் தேசத்தின் ராஜாக்களும்
மனுவேல் ராஜனால் நியாயம் விதிப்பட
அன்பர்கள் நாங்கள் இயேசுவுடன் நிற்க
ஆ ஆ ஆ ஆ ஆனந்தமாமே

இயேசு மணாளனுடன் சுதந்திரம் பெற்று கொள்ள
தேசமெங்கும் ஆண்ட தீதுகள் போய்விட
பரனின் துதியை யாவரும் பாடிட
ஆ ஆ ஆ ஆ ஆர்பரிப்போமே

ஆயிரமாண்டுகளும் பூமியின் ஆட்சிகளும்
முற்றுமாய் தீர்ந்தபின் அன்பருடன் நாங்கள்
நித்தியம் ஜீவித்து ஆளுகை செய்திட
ஆ ஆ ஆ ஆ ஆனந்தமாமே 

TPM Tamil Song No 15: பேசும் தேவா உம்மாவியினால்


TPM Tamil Song No 15: பேசும் தேவா உம்மாவியினால் 

பேசும் தேவா உம்மாவியினால் - நீர்
பேசும் தேவா உம்மாவியினால்

மரித்தோர் உந்தன் வார்த்தை கேட்டிடும் நேரமதில்
பிழைப்பார் தேவா உம்மாவியினால் - அவர்

மரித்த லாசர் உந்தன் வாக்கு கேட்டவுடனே
எழுந்து வந்தான் உம்மாவியினால் - அவன்

பெந்தகோஸ்த்தின் நாளில் மூவாயிரம் பேருக்கு
பேதுருவால் பேசியபோல் - நீர்

ஐந்து அப்பம் இரண்டு மீனை ஆசீர்வதித்தது போல்
ஆசீர்வதித்தனுப்பும் தூதை - நீர்

இப்பிரபஞ்சத்தின் தேவன் மூடிய மன கண்ணை
திறவும் தேவா உம்மாவியினால் - நீர்

 அபிஷேகம் பண்ணும் தூதால் ஆத்துமாக்கள் உயிரடைய
ஊற்றும் தேவா உம்மாவியிப்போ - நீர் 

TPM Tamil Song No 14: இயேசு ராஜா உம்மையே நான்


TPM Tamil Song No 14: இயேசு ராஜா உம்மையே நான் 

இயேசு ராஜா உம்மையே நான்
ஸ்தோத்தரிக்கிறேன்

யெகோவாவே உந்தன் ஆவி எண்ணில் ஊற்றிடும்
காத்திருக்கும் யாவர் மேலும் ஆவியை ஊற்றும்

சகல மனிதர் மேலும் ஆவியை ஊற்றும்
ஆவியின் மேல் பசிதாக முண்டாக செய்திடும்

பரிசுத்தராக நானிருப்பதினாலே
நீயும் பரிசுத்தமாகு என்றுரைத்த வல்லவா

உன்னாலொன்றும் செய்ய ஏலாதென்று சொன்னவா
தேவா நீரே வந்து என்னை பரிசுத்தமாக்கிடும்

கல்வாரியின் ஜீவ ஆறு ஓடுதே இன்று
ஊற்றாய் ஓடுதே இன்று எனக்காய் ஓடுதே இன்று

விசுவாசம் என்னிலே பெறுக செய்திடும்
மறை பொருள்கள் யாவையும் வெளிப்பட செய்திடும்

மறுரூப ஆவி என்னில் வைத்திடும் சுவாமி
என் மனதிலெல்லாம் சுத்தமான சிந்தையாக்கிடும்

குறைகள் ஒன்றும் என்னிடத்தில் கண்டிடாதையா
இதோ நாள் முழுதும் என்னையே நான் உம்மில் வைக்கிறேன் 

Monday, May 18, 2020

TPM Tamil Song No 13: ஆனந்த கண்ணீர் பொழியும் தேசமதில்


TPM Tamil Song No 13: ஆனந்த கண்ணீர் பொழியும் தேசமதில்

ஆனந்த கண்ணீர் பொழியும் தேசமதில் 
நான் அன்பர் இயேசுவின் பொன்முகம் காணுவேன் 

சந்தோஷமே அது சந்தோஷமே என 
கானந்தமே பரமானந்தம் இயேசு 

முன்னொரு நாளில் என் கண்ணீரை கண்டவர் 
என்னிலிருந்து துயரை எடுத்தவர் 
இந்நிலந்தனில் இவர்க்கு நிகரெவர் 
என்னுள்ளில் தங்குமியேசு மகாராஜன் போல் 

யுத்தக்களத்தில் என் சேனை தலைவரும் 
யுத்தத்தில் யாதுமே தோல்வி வரவிடார் 
ஆதி இடை கடை தோல்வி போற் தோண்றுகில் 
ஆத்திரமயான்பர் தாங்கி நடத்துவார் 

ஒவ்வொரு நாளிலும் இயேசு என்னுடனே 
ஒவ்வொரு சோதனை தன்னிலுமிருப்பார் 
சார்ந்து இளைப்பாற இயேசுவின் மார்புக்கோல் 
பாரில் நினைத்திடில் வேறொன் றெனக்கில்லை 

தாயை மறந்து என் தந்தை இழந்து என் 
வேலை இனம் ஜனம் யாவும் மறந்தேன் நான் 
என்னுடன் தங்கிடும் இன்ப மகா ராஜன் 
தன் பாதம் எல்லாம் எனக்கவர் 

என்னை மறவாத காருண்ய பூமானே 
உன்னை மறந்து யான் என்ன செய்வேன் ஐயா 
என்றும் எனக்குள்ள தெல்லாம் மறந்து நான் 
இன்றும் என்றும் உமக்கு ஊழியம் செய்குவேன் 

TPM Tamil Song No 12: தேவாதி தேவனின் தானங்கட்காக


TPM Tamil Song No 12: தேவாதி தேவனின் தானங்கட்காக 

தேவாதி தேவனின் தானங்கட்காக 
ஆவலுடன் அடியாருமுன்பாக 
பூவினிற் புவி நேசர் முன்பாக 
ஆவியிலும் அதிவணக்கமாக 

போற்றுவோம் போற்றுவோம் 
போற்றிடுவோம் பொற்பரனை 

அற்புதம் அற்புதம் அரூபியான 
நற்பரன் சொற்படி சொரூபியானார் 
பற்பல பாதகர் பரனை நாடி 
நித்தியமாக நிர்மலனை சேர 

இம்மானுவானவர் அம்பரமேக 
இம்மானுவேலனும் மனுவாகி 
தம்மை வெறுத்து தரை மட்டும் தாழ்ந்து 
நம்மை யனைத்திட தம்முயிர் விட்டனர் 

காசினியெங்கும் காணக்கிடைக்காத 
வாசஸ்தலமென்று எங்களுக்காக 
ராஜனுடன் நாமிருப்பதற்காக 
ஆயத்தமாக்கி அழைப்பேனென்றோ 

துன்பங்கள் சூழினும் இன்பமதாக்கி 
அன்புடன் ஐயன் அடியாரை காத்து 
இன்றுவரை இறையின் பாதம் நாட 
ஈந்த கிருபை நினைந்து நட்போடு 

பாத்திரமற்ற இப்பாவிகளிவ் வித 
காத்திராத கன தானங்களை பெற 
உத்தம மார்கமதான என் இயேசுவின் 
சுத்தமுகம் கண்டு என்று களிக்கலாம் 

TPM Tamil Song No 11: என்னையும் ஒப்புவித்தேன்


TPM Tamil Song No 11: என்னையும் ஒப்புவித்தேன்

என்னையும் ஒப்புவித்தேன் நின் மனம் போல் நடத்தையா 

இன்பமுள்ள ஜீவியந்தான் ஏழை யான் விரும்பவில்லை 
துன்பமில்லா சொகுசுகளும் தொல்லுலகில் தேவையில்லை 

ஜீவனாலோ சாவினாலோ தேவ நாமம் சீரிலங்க
பாவியென காவியீந்து பாரில் வைத்தால் போதுமையா 

நேர்மையுறும் பாதையிலோ நெடுகவே முட்காடதிலோ .
நீடிய பொறுமையிலோ நித்தம் நித்தம் சாவினிலோ 

பஞ்சமதோ பட்டினியோ மிஞ்சிய கொடும் விபத்தோ 
சஞ்சலமோ வந்திடினும் ஸ்வாமி என்னை கைவிடீரே 

சொந்த ஜனம் மோசம் பல சூழ்ந்து என்மேல் வந்திடினும் 
சுந்தர மைந்தனை போல் சோர்ந்திடாதென கருள்கூர் 

Monday, May 11, 2020

TPM Tamil Song No 10: கிறிஸ்துவையே வாழ்த்துவேன்


TPM Tamil Song No 10: கிறிஸ்துவையே வாழ்த்துவேன் 

கிறிஸ்துவையே வாழ்த்துவேன் 
மேசியாவை போற்றுவேன் 
அன்பார் நெஞ்சில் சார்ந்து நான் 
அன்பரையே வாழ்த்துவேன் 

அல் பகலும் நேர்த்தியாய்
அனுதினமும் பத்திரம் 
பாதுகாக்கும் நேசரை .
பணிந்து குனிந்து வணங்குவேன் 

நாவிற் துதி வைத்திடும் 
நல்வரங்கள் தந்திடும் 
நித்தம் நித்தம் இயேசுவை 
வாழ்த்துவேன் நித்திரையில் 

நித்திரை விழிப்பிலும் 
இயேசு நீர் என் பக்கத்தில் 
சத்துரு சதிமோசம் 
செய்திடாமற் காக்கிறீர் 

சதா காலங்களிலும் 
உன்னுடன் நானிருப்பேன் 
என்று வாக்குரைத்தவா 
உம்மையே நான் வாஸ்த்துவேன் 

TPM Tamil Song No 9: வானபராபரனே இப்போ வாரும்


வானபராபரனே இப்போ வாரும் எம் மத்தியிலே 
வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா 
எல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாரும்மையா 

பக்தரின் மறைவிடமே ஏழை மக்களின் அதிபதியே 
பாதமே கூடும் பாவையர் எமக்கு பரிசுத்த மீயுமய்யா 
வாக்கு மாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க 

கிருபாசனபதியே நின் கிருபையில் நிலைத்திடவே 
கஷ்டமத்திலும் நஷ்டமதிலும் நின் கருணையில் நின்றிடவே 
நின் சக்தியோடு பக்தியில் நாம் பூரணராகிடவே 

தாய் என்னை மறந்தாலும் ஐயா நீர் மறவாதிருக்க 
ஆவியினால் எம் உள்ளமதினில் அக்கினி பற்றிடவே 
யெகோவாவே எண்களின் ராஜ எழுந்து வாருமையா 

நினைத்திரா தினமதில் எம் கர்த்தரே வருவீரே 
ஆவி ஆத்துமா மாமிசம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே 
மாசில்லா பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே 

வாதை பிணி தீர  எம் வாய்த்த மருந்தே நீர் 
பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு ரத்தமே 
கல்வாரியண்டை பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே 

ஆகாய மேகமதில் எக்காலம் தொணித்திடவே 
அன்பின் தயாளன் ஆனந்த பூமான் வரவே இரண்டாம் முறையே 
ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய் 

Thursday, May 7, 2020

TPM Tamil Song No 8: ஸ்தோத்திரம் இயேசு நாதா



TPM Tamil Song No 8: ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்!

வான துதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு!

இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்!

நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்!

இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!

நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!

TPM Tamil Song No 7: என் ஆத்துமாவே என் முழு உள்ளமே



என் ஆத்துமாவே என் முழு உள்ளமே 
உன்னதன் உத்தம நாமத்தை ஸ்தோத்தரி 

வையககத்தில் உனக்கு மெய்யன் மனதிற்ங்கி 
செய்த உபகாரம் மறவாமல் 

பாவத்திலமிழ்ந்தி பிணியினால் வருந்தி 
சாப குழியில் வீழ்ந்து ஆபத்தில் நிற்கையில் 
மீட்டுனகிறக்கம் கிருபை என்னும் முடியை 
சூடிய கரத்தனை நித்தம் நினைத்து 

பெற்ற பிதாபோல் பரிதபித்தனைப்பார் 
பற்றிடும் அடியார் முற்றும் பயபடில் 
அக்கிரம மெல்லாம் கார்தான் கருணையால் 
ஆக்கினையின்றி அகற்றிடுவார் 

மாமிசமெல்லாம் வாடும் புல் தானே 
பூவில் வளர்ந்தடில் வயலின் பூவாமே 
கர்த்தன் கருணைக்கு கரையென்பதில்லையே 
நித்தியமாக நிலைத்திடுமே 

தித்திடுவீரே தூத கணங்களே 
ஜோதியுள்ளவர் கோடி சேனைகளே 
ராஜ்ஜியங்களிலவர் காட்டிய கிரியைக்காய் 
சாட்சிகள் நாம் துதி சாற்றிடுவோம் 

Friday, May 1, 2020

Tamil Hymn No 6: ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா


Tamil Hymn No 6: ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா 

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா 
உந்தன் அன்புக்காய் - ஸ்தோத்திரம் 

ஏகசுதன் ஏசுராஜனை 
சிநேகமோடே தந்ததால் - ஸ்தோத்திரம் 

நஷ்டப்பட்டு தூரம் போன என்னை 
தேடி வந்த மீட்பரே- ஸ்தோத்திரம் 

பெதோகோஸ்தே தினமதில் 
பலத்த காற்றாய் வந்தோனே - ஸ்தோத்திரம் 

லோகத்தின் பாவ பாரமெல்லாம் 
தேகத்தில் ஏற்ற நாதனே - ஸ்தோத்திரம் 

சத்துருவின் புத்திரனாகிய என்னை 
தேவ புத்ரனாக்கியதால் - ஸ்தோத்திரம் 

எந்தன் நாமம் உந்தன் புஸ்தகத்தில் 
சேர்த்ததை நினைத்ததால் - ஸ்தோத்திரம் 

உம்மை பின்பற்ற வேணுமென்று 
சொல்லி போன நாதனே - ஸ்தோத்திரம் 

ஜீவனுள்ளோர் மத்தியிலென்னை 
 ஜீவனோடே வைத்ததால் - ஸ்தோத்திரம் 

எந்தன் ஆவி ஆத்தும சரீரம் 
என்றைக்குமா ஏற்றோனே - ஸ்தோத்திரம் 

Tamil Hymn No 5: தேவரீர்க்கு ஸ்தோத்திரம்


Tamil Hymn No 5: தேவரீர்க்கு ஸ்தோத்திரம் 

தேவரீர்க்கு ஸ்தோத்திரம் தேவரீர்க்கு ஸ்தோத்திரம் 
தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும் 
கல்வாரி மலையில் குரிசினில் மரித்த 
இரட்சகற்கு ஸ்தோத்திரம் இன்ருமென்றைக்கும் 

பாவ பாரத்தில் நின்று என்னை இரட்சித்தார் 
தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும் 
ஆவியின் பெலத்தால் என்னுள்ளம் நிறைத்தார் 
தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும் 

ரோக வேளையிலேன் கூடயிருக்கினற 
தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும்
பஞ்ச காலங்களிலும் பாதுகாக்கின்ற 
தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும்

ஏழை யென்னை ஆசையோடு நோக்குகின்ற 
தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும்
என்றுமெந்தன் பாவமெல்லாம் சுமக்கின்ற 
தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும்

சத்துருக்கள் முன்பு பந்தி ஆயத்தம்செய்த 
தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும்
வல்ல கிருபையால் என்றும் காத்ததாலே 
தேவரீர்க்கு ஸ்தோத்திரம் இன்றுமென்றைக்கும்