Tuesday, April 28, 2020

Tamil Hymn No 4: போற்றிடுவோம் போற்றிடுவோம்


Tamil Hymn No 4: போற்றிடுவோம் போற்றிடுவோம் 

போற்றிடுவோம் போற்றிடுவோம் எங்கள் இரட்சகனை
வாழ்த்திடுவோம் வாழ்த்திடுவோம் நம்மை மீட்டவரை

பாவ வேடம் பூண்டு வந்த பரலோக நாதனை
பாவிகட்காய் ஜீவன் விட்ட பரிசுத்த ராஜனை - போற்றிடுவோம்

பாவ வினை தீர்க்கவென்று பாரில் வந்தவரை .
பாக்களாலும் நாதத்தாலும் ஏற்றி போற்றுவோமே - போற்றிடுவோம்

ஜீவ நதி ஒழுகுகின்ற ஜீவா நாயகனை 
ஜீவ நதிதனில் மூழ்கி தரிசிப்போமே - போற்றிடுவோம்

சுத்த ஜலம் கொண்டு நம்மை சுத்திகரித்தோனை 
சுத்த கைகளை உயர்த்தி ஸ்தோத்தரிப்போமே - போற்றிடுவோம்

வாக்குத்தத்த ஆவியின் வல்லமை அளித்தோனை 
வாசனையோடு சேர்ந்து வாழ்த்தி போற்றுவோமே - போற்றிடுவோம்

பரிசுத்தவான்களின் பரலோக வைத்யனை 
பரிசுத்த சபையதில் பாடி துதிப்போமே - போற்றிடுவோம்

சரீர சுகங்கட்கெல்லாம் சக்தியளித்தோனை 
சர்வ நாளும் சாட்சியாக நின்றிலங்குவோனை - போற்றிடுவோம்

சுத்த பிரகாசமான ஆடையளித்தோனை 
நித்திய விவாகத்திற்காய் நியமித்தோனை - போற்றிடுவோம்

நினையாத நேரத்தில் வந்திடுவேன் என்றோனை 
நித்தமும் ஜெபத்துடன் விழித்து நோக்குவோமே - போற்றிடுவோம்

Tamil Hymn No 3: எந்நாளும் ஸ்துதிக்க வேணும்


எந்நாளும் ஸ்துதிக்க வேணும் - நாதனை
எந்நாளும் ஸ்துதிக்க வேணும்

வந்தனம் பாடி மன்னன் முன் கூடி
மயக்கமகற்றி திரு முன்னில் - நன்றியுடனே

ஆனந்தமாய் கூடுவோம் - பரனை வெகு
சத்தமாய் பாடிடுவோம்
கீத  கணம் தேடி நாதனை நாம் பாடி
நாதனாமவரின் திரு நாமமே கதியாய் நாடி - எந்நாளும்

சர்வ வல்ல நாயகன் - அவர் நமது
நல்ல குண போதகன்
நிச்சயம் தாசர்க்கு சித்தம் வெளியாக்கி
கஷ்டத்தில் நின்றவரை முற்றும் விடுவிப்பவரை - எந்நாளும்

தம்மை போற்றி துதிக்கும் - ஜனங்கள் பாரம்
தாமே சுமந்திடுவார்
ராஜாதி ராஜாவாய்  என்றுமே வாழ்ந்திடுவார்
நண்றியோடே  எல்லோர்களும் இயேசுவை வணங்கிடுவோம் - எந்நாளும்

சிருஷ்டிகளின் நாதனே - ஜெயம் பெருகும்
தூதர்களின் ராஜனே
ஜீவனின் ஊற்றாமே ஜீவா லோக ஈசனே
ஜீவனளிக்க சொந்த ஜீவனை கொடுத்தவரை - எந்நாளும்

தேவ மகிமைக்காய் நாம் - தொடர்ந்து செய்தால்
என்றும் திவ்யானந்தமாம்
உன்னதன் தன்னுடைய சந்நிதியில் நின்று நாம்
மன்னவனே புதுப்பாட்டு வந்தனங்களோடே நிற்போம் - எந்நாளும் 

Saturday, April 25, 2020

Tamil Hymn No 2: ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்


ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை 
என் ஜீவனுள்ள நாளெல்லாம் சோதோத்தரிப்பேன் 

1. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை 
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் - (ஸ்தோத்தரிப்பேன் )

2. பாவக் கறை நீங்க என்னை முற்றிலுமாக - உம் 
சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்ததினாலே - (ஸ்தோத்தரிப்பேன் )

3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே 
என்றைக்குமாய் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் 
                                                                                                  - (ஸ்தோத்தரிப்பேன் )

4. ஆகாயத்து பட்சிகளை போஷிக்கும் தேவன் 
தினமும் என்னை போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் 
                                                                                                   - (ஸ்தோத்தரிப்பேன் )

5. நாளை தினம் ஊண் உடைக்காய் என் சிந்தைகளை 
கவலையற்ற தாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் - (ஸ்தோத்தரிப்பேன் )

6. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனை - அதி 
சீக்கிரமாய் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் - (ஸ்தோத்தரிப்பேன் )

Wednesday, April 22, 2020

Tamil Hymn No 1: எப்போதும் நாதனை ஸ்தோத்தரி

பல்லவி 

எப்போதும் நாதனை ஸ்தோத்திhp - நாள் 
தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து
அனுபல்லவி 

தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி - எப்போ 

சரணங்கள் 

1. இப்பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினை 
ஏதுக்கென் றுள்ளத்திலெண்ணிக்கையாய் நினை 
அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை      - எப்போ
2. சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவே 
சாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவே 
மண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே      - எப்போ
3. கிறிஸ்தேசு நாயகன் கிருபை உன் பு+ரணம் 
கெம்பீரமாக நீ சொல் நாமோச்சாரணம் 
பாpச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற்காரணம்    - எப்போ 

4. வீட்டிலும், காட்டிலும், வெளியிலும், வழியிலும், 
பாட்டிலும், படிப்பிலும், தேட்டிலும், செழிப்பிலும், 
நாட்டிலும், நகாpலும், ஞான முயற்சியிலும்                - எப்போ 

5. தம்பூர், கின்னரங்கள், ஜாலா;, வீணை, மிரு 
தங்கம், தப்லாவுடன் சங்கீத நாதமாய் 
அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி                    - எப்போ 

6. துன்பங்கள் சூழினும் துக்கத்திலாழினும் 
இன்பமறிந்திலேன் என்றே நீ தாழினும் 
கண்பஞ்சடையச் சாவுக்கென்றே நீ வீழினும்             - எப்போ